

மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஹாஜி அலி தர்காவுக் குள் பெண்கள் அனுமதிக்கப்படு வார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் தர்கா அறக்கட்டளை நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஓர்லி கடற்கரை பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாஜி அலி தர்கா உள்ளது. இங்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த னர். பெண்களும் தர்காவின் மைய பகுதிக்குள் சென்று பிரார்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரி பூமாதா பெண்கள் அமைப்பைச் சேர்ந்த திருப்தி தேசாய் போராட்டங்கள் நடத்தினார்.
மகாராஷ்டிராவில் இவர் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு பிரசித்தி பெற்ற சனி பகவான் கோயிலில் பெண்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் ஹாலி அலி தர்காவுக்குள் நுழையும் போராட்டத்தை அறிவித்தார் திருப்தி தேசாய். மேலும், பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த ஜகியா சோமன், நூர்ஜஹான் நியாஸ் ஆகியோர் தர்காவுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், தர்காவுக் குள் பெண்கள் நுழைவதற்கான தடையை ரத்து செய்தது. ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஹாலி அலி தர்கா அறக்கட்டளை நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தர்கா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் கூறும் போது, ‘‘தர்காவுக்குள் பெண்களை அனுமதிக்க ஹாஜி அலி தர்கா நிர்வாகத்தின் ஒப்புக் கொண்டுள் ளனர். இதுதொடர்பாக புதிய பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும், பெண்களை அனுமதிப் பதற்கு வசதியாக தர்காவுக்குள் சில உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கு 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்றுக் கொண்டு தர்காவில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர். அத்துடன், மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
இதன்மூலம் தர்காவின் மைய பகுதி வரை இனிமேல் ஆண் களைப் போல பெண்களும் அனு மதிக்கப்படுவார்கள்.