குஜராத்தில் பவுத்த சமயத்தைத் தழுவிய 300 தலித்துகள்

குஜராத்தில் பவுத்த சமயத்தைத் தழுவிய 300 தலித்துகள்
Updated on
1 min read

3 தனித்தனியான நிகழ்ச்சிகளில் குஜராத் மாநிலத்தில் சுமார் 300 தலித்துகள் பவுத்த சமயத்தைத் தழுவினர்.

1956-ம் ஆண்டு விஜயதசமி தினத்தன்றுதான் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மற்ற தலித்துகளுடன் பவுத்த சமயத்தைத் தழுவினார் என்பதால் விஜயதசமி தினத்தை தேர்ந்தெடுத்து 300 தலித்துகள் பவுத்த சமயத்தைத் தழுவியதாக குஜராத் பவுத்த சங்கத்தைச் சேர்ந்த ரமேஷ் பேங்கர் என்பவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று தலித்துகள் பவுத்த சமயத்தை தழுவுவது வழக்கம்தான் என்றாலும் உனா சம்பவத்துக்குப் பிறகான இந்த விஜயதசமியில் மதம் மாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.

பவுத்த மதத்தைத் தழுவியர்களில் பெரும்பாலானோர் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “இந்து மதத்தைக் காட்டிலும் பவுத்தம் மனித நேயம் மிக்க மதமாகும்” என்றும், “தலித்துகளுக்கு எதிராக நாட்டில் அராஜகங்கள் பெருகி வருகிறது. காரணம் இந்து மதத்தின் சாதிப்படிமுறை அமைப்பு. பவுத்த மதத்தில் அனைவரும் சமமே” என்றும் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in