மணலே பலகை, குச்சியே எழுதுகோல்... பாடம் கற்பிக்கும் 85 வயது ஆசிரியை!

மணலே பலகை, குச்சியே எழுதுகோல்... பாடம் கற்பிக்கும் 85 வயது ஆசிரியை!
Updated on: 
1 min read

ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்​டத்​தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒரு​வர், மணலை​யும் ஒரு சிறிய குச்​சி​யையும் மட்டுமே பயன்​படுத்தி குழந்​தைகளுக்​குப் பாடம் கற்​பிக்​கிறார்.

‘ஆஷாட்டி அம்​மும்மா'அல்​லது ‘இந்​திரா அம்மா' என்று அன்​புடன் அழைக்​கப்​படும் இவர், சுமார் 10 ஆண்​டுகளாகக் குழந்​தைகளுக்கு எழுத்​துகள், எண்​கள், கணிதம் ஆகிய​வற்​றைச் சொல்லித் தரு​கிறார். மாநிலத்​தின் பாரம்​பரிய ‘ஆசான் களரி’ முறையுடன் தொடர்​புடைய கற்​பித்​தல் பாணியை அவர் பின்பற்றுகிறார்.

ஸ்​மார்ட் வகுப்​பறைகள், டிஜிட்​டல் பல​கைகள் நிறைந்த இந்​தக் காலத்​தில், அவரது எளிய அணுகுமுறை பலரின் கவனத்தை ஈர்த்துள்​ளது.

வீட்​டின் திண்​ணை​யில் பாயில் அமர்ந்​திருக்​கும் குழந்​தைகளின் முன்​னால் ஒரு வாளி மணலைப் பரப்பி, சிறிய மரக்​குச்​சி​யால் அதைச் சமப்​படுத்து​கிறார் அம்​மும்மா.

பின்​னர் ஆங்​கிலம், மலை​யாள எழுத்​துகளை, சாய்வு வடிவங்​கள் உட்​பட, மணலில் எழுதிக் காட்​டு​கிறார். குழந்​தைகள் உன்​னிப்​பாகக் கவனித்து, அதே எழுத்​துகளை விரல்​களால் வரைகின்றனர். அங்கு நோட்​டுப் புத்​தகங்​களோ, பேனாக்​களோ, கரும்​பல​கையோ இல்லை.

தவறுகளை அழித்​து​விட்டு மீண்​டும் எழுதலாம் என்​ப​தால், புதிய காகிதம் தேவை​யின்​றித் திரும்​பத் திரும்​பப் பயிற்சி செய்ய முடிகிறது. இந்​தக் காணொளி @mom_of_safaachiiii என்ற இன்ஸ்டா கணக்​கில் பகிரப்​பட்​டுள்​ளது. இது வைரலாகி பலரின் மனதைக் கவர்ந்​துள்​ளது. ஒரு நெட்டிசன் இந்த இடத்தை “உல​கின் மிக அழகான வகுப்​பறை” என்று வர்​ணித்​துள்​ளார்.

மணலே பலகை, குச்சியே எழுதுகோல்... பாடம் கற்பிக்கும் 85 வயது ஆசிரியை!
ஐரோப்பிய நாடுகளில் தொடரும் வன்முறைப் போராட்டம்: பிரான்சில் 1000 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in