

பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்கான சலுகையை நீட்டித்து மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு உட்பட்ட குடும் பத்தைச் சேர்ந்த மாணவர்கள் மருத் துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கான கல்விக் கட்டண சலுகைக்குத் தகுதி பெறுகின்றனர்.
இதுதொடர்பான அமைச்சர வைக் கூட்டத்துக்குப் பிறகு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ராஜரிஷி ஷாகு மஹராஜ் ஃபீ பிரதிபூர்த்தி திட்டம் முன்பு எஸ்.சி., எஸ்.டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக அமல்படுத்தப்பட்டது.
எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் 100சதவீத கட்டண சலுகையும், 50சதவீத கட்டண சலுகையும் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, ஆண்டு குடும்ப வருமானம் ரூ.6 லட்சத்துக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முடி வால், அரசு கல்லூரிகளில் பயிலும் 6,000 மாணவர்களும், தனியார் கல்லூரிகளில் பயிலும் 1.45 லட்சம் மாணவர்களும் பயனடைவர்.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரூ. 6 லட்சத்துக் குள் இருந்தால், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெற்ற கல்விக் கடனுக்கான வட்டியை அரசு செலுத்தி விடும். இத்திட்டத்தால், அரசு கல்லூரிகளில் பயிலும் 35 ஆயிரம் மாணவர்களும் தனியார் கல்லூரிகளில் பயிலும் 3 லட்சம் மாணவர்களும் பயனடைவர். ரூ.2.5 லட்சம் வரையிலான வருமான வரம்பு உடையவர்களுக்கு நிபந்தனை ஏதுமில்லை.
இதுதவிர, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளின் குடும்பத் தைச் சேர்ந்த குழந்தைக்கு விடுதிக் கட்டணத்துக்கான பஞ்சாப்ராவ் தேஷ்முக் திட்டம் அமல்படுத்தப் படும். இத்திட்டத்தின் கீழ் பெரு நகரங்களில் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும், மாவட்ட அளவிலான நகரங்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும், பழங்குடியினருக்கு விடுதி, உணவு வசதி அளிக்கும் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் ஸ்வயம் திட்டத்தைச் செயல் படுத்த அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர் களுக்கான சலுகைகளை நீட்டிக்க எடுக்கப்பட்ட முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத் தில் மாநில அரசு ஈடுபாடு காட்டி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.