பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை: சோனியா காந்தி கருத்து

பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட கடுமையான எச்சரிக்கை: சோனியா காந்தி கருத்து
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகை யில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்கு தல் நடத்தியிருப்பது வரவேற் கத்தக்கது.

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும். தாக்குதலை வெற்றி கரமாக நடத்திய வீரர்களுக்கு வாழ்த்துகள்.

நமது நாட்டு மக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்திக் கொள்ளும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in