

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்தது: “வாழ்வில் பல கடினமான சூழ்நிலைகளை கடந்து, அத்தகைய நிலையிலும் சமூக பணிகள் செய்து, இன்று நம் பாரதத்தின் குடியரசுத் தலைவர் தேர்தலில் மாபெரும் வெற்றியை உரித்தாக்கியுள்ள தேசத்தின் வரலாற்று தலைமகள் திருமதி திரவுபதி முர்மு அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.