அந்நிய செலாவணி மோசடி புகார் - பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான ரூ.68 லட்சம் டெபாசிட் முடக்கம்

அந்நிய செலாவணி மோசடி புகார் - பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான ரூ.68 லட்சம் டெபாசிட் முடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற முஸ்லிம் அமைப்பின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த அமைப்பு மற்றும் இதன் துணை அமைப்பான ரிஹாப் இந்தியா பவுண்டேஷன் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ. 68.62 லட்சம் தொகையை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மொத்தம் 33 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் பிஎப்ஐ அமைப்பின் 23 கணக்குகளும், ரிஹாப் அமைப்பின் 10 கணக்குகளும் அடங்கும். பிஎப்ஐ, அதன் நிர்வாகிகள் மீது இரு குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை லக்னோ பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளது.

அபிமானிகள் மற்றும் அனுதாபிகள், உறுப்பினர்களிடமிருந்து பணம் திரட்டப்பட்டதாக போலியாக வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. பின்னர் இவை பிஎப்ஐ வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரன்ட் அமைப்பானது கேரளத்தில் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் டெல்லியில் செயல்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in