ஹிமாச்சலில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

ஹிமாச்சலில் மினி லாரி கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி
Updated on
1 min read

ஹிமாச்சல பிரதேசத்தில் சிறிய ரக சரக்கு லாரி 150 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 12 பேர் பலியாகினர்.

ஹிமாச்சலப் பிரதேசம் கின்னாவூர் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நடந்தது.

பாவனாநகர் பகுதியில் குறுகிய வளைவில் லாரியை திருப்ப முயன்றபோது வாகனம் ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி 150 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் வாகனத்தில் இருந்த ஒரு குழந்தை உட்பட 12 பேர் பலியாகினர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கின்னாவூர் எம்எல்ஏ ஜகத் சிங் நேகி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோசமான சாலைகளாலும், ஒரே வாகனத்தில் அதிகமானோர் ஏற்றப்படுவதாலும் ஹிமாச்சலில் அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடைபெறுகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in