சத்தீஸ்கரில் மதுவில் விஷம் கொடுத்து 8 பேர் கொலை: கைதான சைக்கோ கொலைகாரனின் அதிர்ச்சி பின்னணி

ராம் சகாய் ஜெய்​ஸ்​வால்

ராம் சகாய் ஜெய்​ஸ்​வால்

Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் மாநிலம் பலு​டாபஜார் மாவட்​டத்​தில் கடந்த நான்கு மாதங்​களாக அரங்​கேறி வந்த மர்ம மரணங்​களின் பின்னணி​யில் இருந்த ஒரு ‘சைக்​கோ' கொலை​காரனை போலீஸார் கைது செய்​துள்​ளனர்.

சத்​தீஸ்​கரின் கார்வே கிராமத்​தைச் சேர்ந்​தவர் ராம் சகாய் ஜெய்ஸ்​வால் (46). இவர் தனது கடை​யில் எலித் தொல்லை அதிகமாக இருப்​ப​தாகக் கூறி எலி மருந்தை வாங்​கி​யுள்​ளார். முதலில் இந்த விஷத்தை நாய்க்கு வைத்து சோ​தித்​துப் பார்த்துள்ளார். நாய் இறந்​ததைத் தொடர்ந்து தனது எதிரி​களைத் தீர்த்​துக் கட்​ட​ இந்த எலி மருந்​தையே பயன்​படுத்த முடிவு செய்தார்.

கடந்த பிப்​ர​வரி மாதம் தொடங்கி மே மாதம் வரை அந்​தக் கிராமத்​தைச் சேர்ந்த ஆண்​கள் அடுத்​தடுத்து மர்​ம​மான முறையில் உயி​ரிழந்​தனர். ஜூன் 6-ம் தேதி கிராம மக்​கள் சந்தேகத்​தின் பேரில் காவல்​ துறையில் புகார் செய்தனர்.

தோண்டி எடுக்​கப்​பட்ட 7 சடலங்​கள்:

வழக்​கின் தீவிரத்தை உணர்ந்த போலீ​ஸார், ராய்ப்​பூர் மருத்​துவ சட்ட நிறு​வனத்​தின் உதவி​யுடன், ஏற்​கெனவே அடக்​கம் செய்​யப்​பட்ட 7 பேரின் சடலங்களை மீண்​டும் தோண்டி எடுத்து உடற்​கூ​ராய்​வுக்கு அனுப்பினர்.

புத்​ராம் ஜெய்​ஸ்​வாலின் உடல் ஏற்​கெனவே எரிக்​கப்​பட்டு விட்டதால், மற்ற உடல்​களின் டிஎன்ஏ மற்​றும் உடல் உள்ளுறுப்புகள் ஆய்​வகத்​திற்கு அனுப்​பப்​பட்​டன. அதில் விஷம் கலந்​திருப்​பது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸாரின் விசா​ரணை​யில் மாட்​டிய ராம் சகாய், தனது கொடூரக் குற்​றத்தை ஒப்​புக்​கொண்டார்.

தன்​னிடம் இலவச​மாக மது கேட்டு மிரட்​டியது, தேர்​தல் முன்விரோதம், பொது இடத்​தில் அவமானப் ​படுத்​தி​யது, நிலத் தகராறு, செய்​வினை செய்​த​தாக எழுந்த சந்​தேகம் என மிக​வும் அற்​ப​மான காரணங்​களுக்​காக இந்த 8 கொலைகளை​யும் செய்ததை அவர் ஒப்​புக் கொண்​டார். குறிப்​பாக, மகேத்ரு ராம் என்​பவரிடம் வாங்​கிய ரூ.50,000 கடனைத் திருப்​பித் தரக் கூடாது என்​ப​தற்​காகவே அவருக்​கும் மது​வில் விஷம் வைத்​துக் கொன்றுள்​ளார்.

கடந்த ஏப்​ரல் 14ம் தேதி, கார்த்​திக் என்​பவருக்​கும் ராம் சகாய் விஷம் கலந்த மது​வைக் கொடுத்​துள்​ளார். ஆனால், உடல்​நிலை மோசமடைந்த அவரை குடும்​பத்​தினர் உடனடி​யாக மருத்துவமனைக்கு அழைத்​துச் சென்​ற​தால் அவர் உயிர் பிழைத்தார்.

இது குறித்து பலு​டா பஜார் மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் சர்மா கூறுகை​யில், "கைதான ராம் சகாய் ஜெய்​ஸ்​வால் மீது 8 கொலை வழக்​கு​கள் மற்​றும் ஒரு கொலை முயற்சி வழக்​குப்​ பதிவு செய்​யப்​பட்​டு தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது" என்றார்.

<div class="paragraphs"><p><em>ராம் சகாய் ஜெய்​ஸ்​வால்</em></p></div>
தவெக ஆட்சி அமைப்பதற்காக பாஜகவின் ஆதரவை ஒருபோதும் நாடியதில்லை: நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in