

வங்கதேச எல்லையை மூடும் பணி 2 ஆண்டுகளில் முடிவடையும், இதன்மூலம் ஊடுருவல் தடுக்கப்படும் என்று அசாம் முதல்வராக பதவியேற்கவுள்ள சர்பானந்த சோனோவால் கூறினார்.
இது தொடர்பாக பிடிஐ செய் தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வங்கதேச எல்லையை நிரந்தரமாக மூடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 ஆண்டு காலக்கெடு அளித்துள்ளார். ஆற்றோர எல்லை உட்பட எல்லைப் பகுதி முழுவ தையும் மூடும் பணியை இந்தக் காலக்கெடுவுக்குள் முடிப்போம்.
வங்கதேச எல்லை நிரந்தரமாக மூடப்பட்டால் ஊடுருவல் தானாக குறையும். இதுதவிர ஊடுருவலை தடுப்பதற்கு எல்லையில் வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்படும். இந்திய குடிமக்க ளுக்கான தேசிய பதிவேட்டை (என்ஆர்சி) புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிவடைந்து இறுதி வரைவு வெளியானவுடன் அசாமில் ஊடு ருவல்காரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ஊடு ருவல்காரர்கள் தொடர்பான பிரச் சினை முடிவுக்கு வரும்.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான வாகா எல்லைச் சாவடி போல, வங்கதேசத்துடன் எல்லைச் சாவடி அமைக்கப்படும். வாகா எல்லையில் நடைபெறுவது போல் சம்பிரதாய நிகழ்ச்சிகளும் இங்கு இடம் பெறும். இதனை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் அந்த இடம் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்.
தேர்தலில் பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் அனைத்து இன மக்க ளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கி யது வெற்றிக்கு காரணமாகும். மேலும் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை மாநிலங்களுடன் நேரடியாக இணைக்கும் பிரதமர் மோடியின் அணுகுமுறையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் வளர்ச்சி இல்லாதது மற்றும் ஊழல் மலிந்ததும் எங்கள் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
அசாம் கணபரிஷத், போடோ மக்கள் முன்னணி ஆகிய பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது.
இவ்வாறு சர்பானந்த சோனோவால் கூறினார்.