நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வர மருமகன் கோரிக்கை

நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வர மருமகன் கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: நேதாஜியின் மருமகன் சந்திரகுமார் போஸ் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம்தேதி விமான விபத்தில் காலமானார். அவரது அஸ்தி ஜப்பானில் உள்ள ரங்கோஜி கோயிலில் உள்ளது. அவரது அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டும். வெற்றி பெற்ற ராணுவத்தின் தலைவராக சுதந்திர இந்தியாவுக்கு திரும்ப நேதாஜி விரும்பினார். ஜப்பானில் உள்ள அவரது அஸ்தியை இந்தியா கொண்டு வந்து, நேதாஜியின் மகள் அனிதா போஸ் இறுதிச் சடங்குகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் சந்திரகுமார் போஸ் கோரியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in