

மேற்குவங்கத்தில் 31 தொகுதி களுக்கும் அசாமில் 61 தொகுதி களுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அந்தத் தொகுதி களில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளத் தில் ஒரேகட்டமாக மே 16-ல் வாக்குப்பதிவு நடைபெற உள் ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் நிறைந்த மேற்குவங்கத்தில் 6 கட்டங்களாகவும் அசாமில் 2 கட்டமாகவும் தேர்தல் நடத்தப் படுகிறது.
மேற்குவங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 4, 11 ஆகிய இருநாட்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 4-ம் தேதி 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதன்தொடர்ச்சியாக நாளை 31 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக ஆகியவை 31 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இடதுசாரி கட்சிகள் 23 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இதர சிறிய கட்சிகள் 17 தொகுதிகளிலும் சுயேச்சைகள் 17 தொகுதிகளிலும் போட்டி யிடுகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 21 பெண்கள் உட்பட 163 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 70 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
அசாமில் 61 தொகுதிகள்
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் முதல்கட்டமாக 65 தொகுதிகளுக்கு கடந்த 4-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் நாளை 61 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 35 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகளான அசாம் கண பரிஷத் 19, போடோ மக்கள் முன்னணி 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 523 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மேற்குவங்கம், அசாமில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்துத் தொகுதிகளிலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.