

தெலங்கானாவில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலால் நேற்று ஒரே நாளில் 36 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவிலும் 5 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் கோடை வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக தெலங்கானாவில் மட்டும் கடந்த சில தினங்களாக 104 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாகி வருவதால் ஹைதராபாத், ஆதிலாபாத், நிஜாமாபாத் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொது மக்கள் வெளியே தலைகாட்டு வதற்கு மிகுந்த அச்சம் காட்டுகின் றனர். கோடை வெயிலின் உக்கிரத் துக்கு ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்ப தாக கூறப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் 36 பேர் பலியாகினர். இதனால் அம்மாநில அரசு மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆந்திரா வில் இதுவரை கோடை வெயிலுக்கு 70 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடப்பா மாவட்டத்தில் நேற்று மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.