மருத்துவமனையில் சந்திரசேகர ராவுக்கு திடீர் சிகிச்சை

மருத்துவமனையில் சந்திரசேகர ராவுக்கு திடீர் சிகிச்சை
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் (68), நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடது தோள் பட்டையிலும், இடது காலிலும் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இது இதயம் தொடர்பான நோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

பின்னர் சுமார் 3 மணி நேரம் கழித்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவர் கள் கூறுகையில், ‘‘அவரது முதுகு தண்டு சிறிதளவு பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு வயதும் ஒரு காரணம். ஆனால், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவை அளவோடு உள்ளன. பயப்படும்படி ஏதும் இல்லை’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in