ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு

ஆசிஷ் மிஸ்ரா ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு
Updated on
1 min read

உ.பி. மாநிலம் லக்கிம்பூர்கேரி யில் கடந்த அக்டோபர் 3-ம் தேதிபோராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதிலும் தொடர்ந்து நடந்த வன்முறையிலும் 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது காரை மோதியதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். அவருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி யதைத் தொடர்ந்து கடந்த வாரம் ஆசிஷ் மிஸ்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து லக்கிம்பூர்கேரியில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in