சுங்கச் சாவடி பாஸ்டேக் மூலம் ரூ.5,324 கோடி கூடுதல் வசூல்

சுங்கச் சாவடி பாஸ்டேக் மூலம் ரூ.5,324 கோடி கூடுதல் வசூல்
Updated on
1 min read

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளை வாகனங்கள் பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணம் பாஸ்டேக் அறிமுகம் மூலம் கூடுதலாக வசூலாகியுள்ளது. நிதிஆண்டில் ஏப்ரல் முதல் ஜனவரிவரையான காலத்தில் மொத்தம்ரூ.23,622.93 கோடி வசூலாகியுள்ளது. முந்தைய ஆண்டு வசூலான தொகையை விட இது ரூ.5,324 கோடி அதிகம் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத் துறைஅமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலமாக நேற்றுமுன்தினம் அவர் அளித்த விளக்கம் வருமாறு: 2020-21-ம் நிதி ஆண்டில் வசூல் அளவு 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல தவறாக பிடித்தம் செய்யப்பட்டதாக எழுப்பப்பட்ட புகார்கள் ஏறக்குறைய 12.5 லட்சம். இவற்றுக்கு கட்டணங்கள் திரும்ப அளிக்கப்பட்டுள்ளன.

சுங்கச் சாவடிகளில் முறை கேடுகளைத் தவிர்க்க பாஸ்டேக் முறை 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் வாகனங்கள் காத்திருப்பதும் தவிர்க்கப் பட்டுள்ளது.

இருமுறை கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான ஆவண ங்களை தாக்கல் செய்தால் ரீபண்ட்தொகை உரியவர்களது வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

2020-ம் நிதி ஆண்டிலிருந்து இதுவரையில் மொத்தம் வசூலான தொகை ரூ. 58,188.53 கோடியாகும். 2020-21ம் ஆண்டில் ரூ. 20,837 கோடியும், 2021-22ம் நிதி ஆண்டில் ஜனவரி வரையான காலத்தில் ரூ. 26,662 கோடியும் வசூலாகியுள்ளது.

இவ்வாறு கட்கரி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in