Published : 05 Feb 2022 07:30 AM
Last Updated : 05 Feb 2022 07:30 AM
புதுடெல்லி: கரோனா தொற்று பாதிப்பால் மாணவர்களின் கல்வி பாதிக்கப் படாமல் இருக்கவும் அவர்களது கல்வியை ஊக்குவிக்கவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பால் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர் களுக்கு கல்வியில் ஆர்வம் குறையாமல் இருக்கவும் அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படாமல் இருக்கவும் குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்கவும் கற்றல் மீட்சித் திட்டம் என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்துள்ளது.
அதன்படி, மேல்தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி, ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் 25 லட்சம் பேருக்கு ஆண்ட்ராய்ட் போன்கள் வாங்க நிதி மற்றும் சரளமான வாய்வழி வாசிப்பு படிப்பை நடத்தவும் மாநிலங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கற்றலின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கும் தொற்று நோயின் தாக்கத்தைக் குறைப்ப தற்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கென மாணவர்களின் கற்றல் திறனை மீட்டெடுக்க திட்டங்களை வகுக்க வேண்டும்.
இது தவிர மாநிலங்கள் தங்களின் கல்வி ஆண்டு வேலைத் திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT