பாஜக கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல்

பாஜக கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெறும்: கருத்துக் கணிப்பில் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் தற்போது நடத்தப்பட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணி 296 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது என இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இந்தியா டுடே ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. மூட் ஆஃப் தி நேஷன் என்பது இந்தியா டுடே குழுமத்தால் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் நாடு தழுவிய ஆய்வு ஆகும்.

உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் இன்னும் ஒரு மாதத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த கருத்துக் கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் தற்போது மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டால் யார் வெற்றி பெறுவார்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு தேசத்தின் மனநிலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தற்போது நடத்தப்பட்டால், தேசிய ஜனநாயகக் கூட்டணி 296 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. பா.ஜ., தனித்தனியாக, 271 இடங்களை கைப்பற்றும் என அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது.

பஞ்சாப் தவிர அனைத்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகமாகவே உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் உத்தரபிரதேசத்தில் மோடிக்கு 75 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவாவில் 67 சதவீதம் பேர், மணிப்பூரில் 63 சதவீதம், உத்தரகாண்டில் 59 சதவீதம், பஞ்சாபில் 39 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in