

‘பாரத் மாதா கீ ஜே’ என்று சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
''எதிர்க்கட்சிகள் பாஜகவை எதிர்க்கலாம். ஆனால் ‘பாரத மாதா’ புகழ்பாடும் கோஷத்தை எதிர்க்கக்கூடாது. ஒருவேளை அவர்கள் எதிர்த்தால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்லாதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமையில்லை. அவர்கள் இப்போதே நாட்டைவிட்டு வெளியேறலாம்.
சில கோயில்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தவறான நடவடிக்கை. பாலினம், ஜாதியின் பேரால் கோயிலில் வழிபட அனுமதி மறுக்கப்படுவதை அரசு ஏற்றுக் கொள்ளாது.''
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.