Published : 02 Jan 2022 08:25 AM
Last Updated : 02 Jan 2022 08:25 AM

2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31 ஆயிரம் புகார்கள்; 50% உ.பி.

பிரதிநிதித்துவப்படம்


புதுடெல்லி:கடந்த 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 31 ஆயிரம் புகார்கள் வந்தன. இதில் பாதிக்கு மேற்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்தன என்று தேசிய மகளி்ர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் அதிகமான புகார்கள் கடந்த ஆண்டு வந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 23,722 புகார்கள் வந்த நிலையில் கடந்த ஆண்டு 30 சதவீதம் அதிகமான புகார்கள் வந்துள்ளன என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

30ஆயிரத்து 864 புகார்கள் பெண்களிடம் இருந்து வந்துள்ளன. இதில் 11ஆயிரத்து 13 புகார்கள் கவுரமாக வாழ்வதற்கான உரிமையை பெற்றுத் தரக்கோரியும், உணர்வுரீதியாக புண்படுத்துவதாகக் கூறியும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறை பிரச்சினை காரணமாக 6,633 புகார்களும், வரதட்சணை புகார் தொடர்பாக 4,589 புகார்களும் வந்துள்ளன.

இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உ.பி. மாநிலத்திலிருந்து மட்டும் 15ஆயிரத்து 828 புகார்கள் வந்துள்ளன. அடுத்ததாக டெல்லியிலிருந்து 3,336 புகார்களும், மகாராஷ்டிராவிலிருந்து 1,504 புகார்களும், ஹரியானாவிலிருந்து 1460 புகார்களும், பிஹாரிலிருந்து 1456 புகார்களும் கடந்த ஆண்டு வந்தன.

பெரும்பாலான புகார்கள் பெண்கள்தங்களை கவுரமான முறையில் வாழ்வதற்கான உரிமையை பெற்றுத்தரக் கோரியும், குடும்ப வன்முறை குறித்த புகார்களும் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் நடத்தைப் பற்றிய கிண்டல் தொடர்பா 1819 புகார்களும், பலாத்காரம், பலாத்கார முயற்சி தொடர்பாக 1,675 புகார்களும், போலீஸாரின் வன்முறை தொடர்பாக 1,537 புகார்களும், சைபர் குற்றம் தொடர்பாக 858 புகார்களும் வந்துள்ளன

அதிகபட்சமாககடந்த 2014ம் ஆண்டில் 33ஆயிரத்து 96 புகார்கள் வந்தன அதன்பின் கடந்த ஆண்டு 30ஆயிரத்துக்கு மேல் புகார்கள் வந்துள்ளது என்று தேசிய மகளிர் ஆணையம் தெரிவிக்கிறது.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேஹா சர்மா கூறுகையில் “ ேதசிய மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள் பணிகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பெற்றதால், அதிகமான புகார்கள் வருகின்றன. பெண்களுக்குஉதவ புதிய முயற்சிகளையும் எடுக்க இருக்கிறோம்.

24மணிநேரமும் இயங்கும் உதவி எண்கள், புகார் பதிவு செய்ய உதவி எண்கள் வழங்கியிருக்கிறோம். ஜூலை முதல் செப்டம்பர் வரை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3,100 புகார்கள் மாதந்தோறும் வந்தன. கடந்த 2018ம் ஆண்டுதான் கடைசியாக 3ஆயிரம் புகார்களுக்கு மேல் வந்தன” எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x