

புதுடெல்லி:வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிஓடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸியிடம் இருந்து ரூ.13 ஆயிரத்து 109.17 கோடி மதிப்புள்ள கடன் மீட்கப்பட்டுள்ளது என்று நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்
மக்களவையில் நேற்று 2-வது பிரிவு மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் நடப்பு நிதியாண்டில் அரசின் செலவுக்காக கூடுதல் நிதிக் கோரி மானியக் கோரிக்கைத் தாக்கல் செய்யபப்ட்டது. பட்ஜெட் தொகையைவிட கூடுதலாக ரூ.3.73 லட்சம் செலவுக்கான மானியக் கோரிக்கையை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “ நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் தொகையைவிட கூடுதலாக ரூ.3.73 லட்சம் கோடி செலவிடுவதற்கு அனுமதி கோரப்படுகிறது. இதன்படி ஏர் இந்தியா விமானத்தின் கடன்தொகைக்காக ரூ.62 ஆயிரம் கோடியும், உரங்கள் வழங்க மானியமாக ரூ.58,430 கோடியும், ஏற்றுமதி ஊக்கச்சலுகையாக ரூ.53,123 கோடியும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக ரூ22,039 கோடி நிதியும் தேவைப்படுகிறது. இந்த கூடுதல் செலவினத்துக்காக இந்த நிதி கோரப்படுகிறது” எனத் தெரிவித்தார்
வங்கிகளின் கடன் வசூலிப்புக் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில் “ அமலக்கப்பிரிவு தகவலின்படி வங்கியில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரின் சொத்துக்களை விற்பனை செய்து இதுவரை ரூ.13ஆயிரத்து 109.17 கோடிக் கடனை வங்கிகள் மீட்டுள்ளன. கடைசியாக கடந்தஜூலை மாதம் 16ம் தேதிவிஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.792 கோடி சொத்து விற்பனை செய்யப்பட்டு மீட்கப்பட்டது
நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட அதிகாரமிக்க அமைச்சர்குழு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. சமையல் எண்ணெய் விலை உயர்வைக் குறைக்கவும்முயறச்சிகள் நடக்கின்றன
பொத்துதுறை வங்கிகளும் கடந்த 7 ஆண்டுகளில் இதுவரை ரூ.5.49 லட்சம் கோடி கடனை திரும்ப வசூலித்துள்ளன. கடனைச் செலுத்தமுடியாமல் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியவர்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு அந்தப் பணம் வங்கிக்கு செலுத்தப்பட்டு, வங்கி இன்று பாதுகாப்பாக இருக்கிறது. அதேபோல வங்கியில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் பணமும் பாதுகாப்பாக இருக்கிறது.”
இவ்வாறு நிர்மலா சீதாாரமன் தெரிவித்தார்