Last Updated : 05 Dec, 2021 04:06 AM

 

Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

கர்நாடகாவில் 35 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை கரம் பிடித்த முதிர் காதலர்

திருமணத்தின் மூலம் கட்டமைக்கப்படும் குடும்ப அமைப்பு 21-ம் நூற்றாண்டில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் விவகாரத்துகள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில், முதுமையின் முற்றத்தில் இருக்கும் இருவர் இல்லற வாழ்வில் இணைந்திருப் பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹொளேநர சிப்புராவைச் சேர்ந்தவர் சிக்கண்ணா (65). தினக்கூலியான இவர் 35 ஆண்டுகளுக்கு முன்பு மைசூருவில் உள்ள தனது அத்தை மகள் ஜெயம்மாவை (60) நேசித்துள்ளார். நாளடைவில் இருவரும் காதலித்த நிலையில், ஜெயம்மாவின் பெற்றோர் பொருளாதார காரணங்களால் சிக்கண்ணாவை நிராகரித்தனர். மேலும் ஜெயம்மாவை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ள‌னர். அந்த திருமண வாழ்வு சரியாக அமையாததால், 4 ஆண்டுகளுக்கு பின் ஜெயம்மா தன் கணவரை பிரிந்தார்.

ஆனால் சிக்கண்ணா தன் காதலியை நினைத்துக்கொண்டு, திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இவ்வாறாக 35 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், கடந்தசில மாதங்களுக்கு முன்பு உறவினர்களின் நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது சிக்கண்ணா திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதும், ஜெயம்மா கணவரை பிரிந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் செல்போன் மூலம்பேசி தங்களது காதலை புதுப்பித்து கொண்ட‌னர். சிக்கண்ணாஜெயம்மாவை கரம் பிடிக்க முடிவெடுத்து குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல்கோட்டையில் ஜெயம்மாவை கரம் பிடித்தார் சிக்கண்ணா.

‘‘இளம் வயதில் தவறவிட்ட காதலை முதுமையில் கைப்பற்றிக் கொண்டது மிகுந்த‌ மகிழ்ச்சி அளிக்கிறது'' என சிக்கண்ணா மகிழ்ச்சியோடு புன்னகைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x