

ஒமைக்ரான் கவலைகளுக்கு மத்தியில் வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் மரபணு வரிசைப்படுத்தல் முடிவுகளுக்காக டெல்லி மருத்துவர்கள் காத்திருக்கிறார்கள்.
ஒமைக்ரான் பரவலை முன்னெச்சரிக்கையோடு தடுக்கும்வகையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இந்தியாவுக்குள் வரும் பயணிகளுக்கு ஏற்கெனவே தொடர் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டுள்ளன. உருமாற்ற ஒமைக்ரான் வைரஸ் ஆபத்தில் சிக்கியுள்ள உள்ள' நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சோதனையை உள்ளடக்கிய விமான நிலையங்களுக்கான தொடர் வழிகாட்டுதல்களை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு அவசியம்.
இதுகுறித்து ஜெனஸ்ட்ரிங்ஸ் டயக்னாஸ்டிக்ஸ் இயக்குனர் மருத்துவர் கௌரி அகர்வால் கூறியதாவது:
புதன்கிழமை வெளிநாடுகளிலிருந்து பயணிகள் டெல்லி விமானத்தில் தரையிறங்கியதை அடுத்து அவர்களுக்கு கோவிட் 19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களில் 4 பேருக்கு கோவிட் 19 பாஸிட்டிவ் நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையின் மூலம் தெரியவந்தது. அவர்களிடம் ஒமைக்ரான் உருமாற்ற வைரஸ் நோய்த்தொற்று உள்ளதா என கண்டறிய கோவிட் 19 பாஸிட்டிவ் உள்ள பயணிகளின் மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இவர்களின் மரபணு வரிசைப்படுத்துதல் முடிவுகளில் ஒமைக்ரான் பற்றிய முடிவு தெரியவரும். தற்போது நான்கு கோவிட்-பாசிட்டிவ் பயணிகளும் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சைக்காக பிரத்யேக வார்டில் டெல்லியின் லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (LNJP) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் மற்றும் ஆம்ஸ்டர்டாமில் இருந்து இன்று டெல்லி விமான நிலையத்திற்கு வந்த நான்கு பயணிகளின் மரபணு வரிசை முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். இரண்டு நாட்களில் ஐந்து நோயாளிகள் நேர்மறை சோதனை செய்தனர்.
இவ்வாறு கௌரி அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதிய நெறிமுறைகளில் முக்கிய அம்சங்கள்
ஒமைக்ரான் உருமாற்றம் குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், புதிய உருமாற்ற வைரஸ் நோய்த்தொற்று குறித்து சில நாடுகளில் பரவியுள்ளதை அடுத்து, ஆபத்தில் சிக்கியுள்ள உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான சோதனையை உள்ளடக்கிய விமான நிலையங்களுக்கான புதிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் பரிசோதனையில் 'நெகட்டிவ்' முடிவு அவசியம்.
இந்தியாவுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் கடந்த 14 நாட்களின் பயண வரலாற்றைக் கொண்ட ஏர் சுவிதா போர்டலில் உள்ள சுய அறிவிப்பு பலகை படிவத்தை ஏறும் முன் நிரப்ப வேண்டியது கட்டாயமாகும்.
வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகள் தங்கள் ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் போது தனி ஹோல்டிங் பகுதியில் தங்கவைக்கப்படுவார்கள். ஒவ்வொரு விமான நிலையத்திலும் 'ஆபத்திலுள்ள' நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு எல்லை நிர்ணயம் செய்யப்படலாம்,
நெரிசலைத் தவிர்ப்பதற்கான நெறிமுறைகள் உட்பட, கோவிட் 19-க்கான விதிமுறைகள் பயணிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்து பயணிகளுக்கு தேவையான உரிய வசதிகளுடன் அவர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.