விவசாயிகளிடம் இருந்து 15,000 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய முடிவு

விவசாயிகளிடம் இருந்து 15,000 டன் வெங்காயம் கொள்முதல் செய்ய முடிவு
Updated on
1 min read

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த விவசாயிகளிடம் இருந்து 15 ஆயிரம் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நுகர்வோர் துறை மூத்த அதிகாரி விஸ்வநாத் கூறியபோது,

மகாராஷ்டிர மாநிலம் லசால்கோன் பகுதியில் அடுத்த மாதம் முதல் விவசாயிகளிடம் வெங்காயம் கொள்முதல் தொடங்கப்படும். இவை அங்கேயே சேமித்து வைக்கப்படும் என்றார்.

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெங்காய விலை உயர்வது வழக்கம். அதை கட்டுப்படுத்த வெங்காயம் இப்போதே சேமிக்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in