கலவரத்தில் உயிரிழந்த பாஜக தொண்டர் குடும்பத்தினருடன் உ.பி. அமைச்சர் சந்திப்பு

கலவரத்தில் உயிரிழந்த பாஜக தொண்டர் குடும்பத்தினருடன் உ.பி. அமைச்சர் சந்திப்பு
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3-ம் தேதி பாஜக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்தப் பகுதியில் விவசாயிகள் பேரணி சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த பாஜகவினரின் கார்களில் ஒன்று, விவசாயிகள் மீது மோதியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல் சம்பவத்தில் 4 விவசாயிகளும், பாஜக தொண்டர்கள், கார் ஓட்டுநர் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர்.

இதில், விவசாயிகள் மீது காரை மோதியதாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த மோதலில் உயிரிழந்த பாஜக தொண்டர் ஷுபம் மிஸ்ரா மற்றும் கார் ஓட்டுநர் ஹரி ஓம் ஆகியோரின் குடும்பத்தினரை உ.பி. சட்டத்துறை அமைச்சர் பிரஜேஷ் பதக் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in