பாலியல் வன்கொடுமை வழக்குகள்- 2020-ல் ராஜஸ்தான் முதலிடம்

பாலியல் வன்கொடுமை வழக்குகள்- 2020-ல் ராஜஸ்தான் முதலிடம்
Updated on
1 min read

நாட்டில் கடந்த 2020-ல் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பான புள்ளிவிவரத்தை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

இதில் பாலியல் வன்கொடுமைவழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசம் 2,769 வழக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் மத்திய பிரதேசம் 2,339 வழக்குகளுடன் மூன்றாம்இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிரா 2,061 வழக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தாலும் அம்மாநிலத்தில் கடந்த 2020-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் குறைந்துள்ளன. இம்மாநிலம் 34,535 வழக்குகளுடன் இதில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 49,385 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதலிடத்திலும் 36,439 வழக்குகளுடன் மேற்கு வங்கம் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

கடந்த 2020-ல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 1,279 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 4,031 பேர் 18 வய துக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குடும்ப நண்பர்கள், அண்டை வீடுகளில் வசிப்பவர்கள், உடன் பணியாற்றுவோர் மற்றும் பிற அறிமுகமான நபர்கள் ஆவர்.

ராஜஸ்தானில் எஸ்சி.களுக்கு எதிரான குற்றங்கள் 3 ஆண்டாக அதிகரித்துள்ளன. கடந்த 2018-ல் இந்த குற்றங்கள் எண்ணிக்கை 4,607 ஆக இருந்தது. இது, 2019-ல் 6,794 ஆகவும் 2020-ல் 7,071 ஆகவும் உயர்ந்துள்ளது. -பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in