

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், காஷ்மீரில் 60-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாயமானதாக வெளியான செய்திகளை காஷ்மீர் போலீஸார் மறுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பல் வேறு குழுக்களைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் சமீபகாலமாக காஷ்மீரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காணவில்லை என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளி யானது. காணாமல் போன இளைஞர்கள் தீவிரவாதப் பயிற்சி பெற சென்றுள்ளார்களா என்றும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில், காஷ்மீரில் இளைஞர்கள் காணாமல் போனதாக வெளியான செய்தி களை காஷ்மீர் போலீஸார் மறுத்துள்ளனர். இது தொடர் பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை. முற்றிலும் அடிப்படையற்றவை என்று காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. கூறியிருப்பதாக போலீஸார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். தலி பான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் வந்துள்ளதால் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று இந்திய ராணுவம் கடந்த வாரம் கூறியிருந்தது குறிப் பிடத்தக்கது.-பிடிஐ