6 நாட்களுக்குப் பின் இந்தியாவில் கரோனா தொற்று குறைந்தது: உயிரிழப்பு 422

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் 6 நாட்களுக்குப் பின் தினசரி கரோனா தொற்றுப் பரவல் 30 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிகாக 30 ஆயிரத்து 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 17 லட்சத்து 26 ஆயிரத்து 507 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 8,760 பேர் குறைந்துள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில், 1.28 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவில் இருந்து இதுவரை 3 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரத்து 354 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 90 பேர், கேரளாவில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 25 ஆயிரத்து 195 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16 லட்சத்து 49 ஆயிரத்து 295 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 47 கோடியே 12 லட்சத்து 94 ஆயிரத்து 789 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 47.22 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in