மே. வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு பின்னரும் 700 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மே. வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு பின்னரும் 700 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு நிறைவடைந்த பிறகும், பாது​காப்பு கருதி சுமார் 700 கம்​பெனி மத்​திய ஆயுதக் காவல் படை​யினர் அங்​கேயே தங்​கி​யிருப்​பார்​கள் என்று தேர்​தல் ஆணைய மூத்த அதி​காரி நேற்று தெரி​வித்​தார்.

தேர்​தலுக்​குப் பிந்​தைய வன்​முறை​களைத் தவிர்க்​க​வும், மாநிலத்​தில் அமை​தியை நிலை​நாட்​ட​வும் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக அவர் குறிப்​பிட்​டார்.

இதுகுறித்து தேர்​தல் ஆணைய அதி​காரி மேலும் கூறிய​தாவது: தேர்​தல் ஆணை​யத்​தின் கடந்த மார்ச் 19-ம் தேதி வகுக்​கப்​பட்ட பாது​காப்​புத் திட்​டத்​தின்​படி, வாக்​குப்​ப​திவு முடிந்த பிறகும் 700 கம்​பெனி மத்​தி​யப் படை​யினர் மேற்கு வங்​கத்​திலேயே தங்​கி​யிருப்​பர். அவர்​கள் சட்​டம் - ஒழுங்​கைப் பராமரிக்​க​வும், அசம்​பா​விதங்​களைத் தவிர்க்​கும் பணி​யிலும் ஈடு​படு​வர்.

மறு உத்​தரவு வரும் வரை அவர்​கள் பணி​யில் தொடர்ந்து இந்​தப் பணி​களி்ல் ஈடு​படு​வார்​கள். குறிப்​பாக, பதற்​றம் நிறைந்த பகு​தி​களில் மாநில நிர்​வாகத்​திற்​குத் துணை​யாக இவர்​கள் தேவை​யான பாது​காப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்​வர். கள நில​வரம் மற்​றும் பாது​காப்பு முகமை​களின் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் படைகளின் எண்​ணிக்​கையை அதி​கரிப்​பது குறித்து முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

முன்​ன​தாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா கடந்த திங்​கள்​கிழமை பேசுகை​யில், தேர்​தல் முடிந்த பிறகு சுமார் 60 நாட்​களுக்கு மத்​தி​யப் படை​யினர் மேற்கு வங்​கத்​தில் நிலைநிறுத்​தப்​படு​வார்​கள் என்று தெரி​வித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

மே. வங்கத்தில் வாக்குப்பதிவுக்கு பின்னரும் 700 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வாய்ப்பு: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in