நாசிக் ஐடி அலுவலகத்தில் மதமாற்ற முயற்சி: மனிதவள பிரிவு மேலாளர் உட்பட 7 பேர் கைது

நாசிக் ஐடி அலுவலகத்தில் மதமாற்ற முயற்சி: மனிதவள பிரிவு மேலாளர் உட்பட 7 பேர் கைது
Updated on
1 min read

நாசிக்: ​டாடா கன்சல்​டன்சி சர்​வீசஸ் நிறு​வனத்​தின் (டிசிஎஸ்) நாசிக் கிளை அலு​வல​கத்​தில் பயிற்​சிக்கு சேரும் ஊழியர்​களிடம் பாலியல் துன்​புறுத்​தல் மற்​றும் மதமாற்ற முயற்​சி​யில் ஒரு குழுவினர் ஈடு​படு​வ​தாக புகார் அளிக்​கப்​பட்​டது. இதையடுத்து அங்கு பெண் போலீ​ஸார் துப்​புரவு பணி​யாளர்​கள் போல் வேலைக்கு அனுப்​பப்​பட்டு கண்​காணிக்​கப்​பட்​டனர். இதில் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்​யப்​பட்​டன.

இந்த குற்​றச் செயலில் மனித வள பிரிவு மேலா​ளர் மற்​றும் மூத்த ஊழியர்​கள் ஈடு​பட்​டது தெரிய​வந்​தது. பயிற்​சிக்கு வருபவர்களிடம் பணத் தேவை உள்​ளவர்​கள், குடும்ப பிரச்​சினை உள்​ளவர்​கள் ஆகியோரை குறி​வைத்து இந்த தாக்​குதல் நடத்தப்பட்​டுள்​ளது. பாலியல் துன்​புறுத்​தலுடன் மதமாற்ற முயற்சி​யிலும் ஒரு கும்​பல் ஈடு​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக மனிதவள மேலா​ளர் நிதா கான், ஆசிப் அன்​சா​ரி, சஃபி ஷேக் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்த கும்​பல் பயிற்​சிக்கு சேர்ந்​தவர்​களிடம் இந்து கடவுள்​கள் பற்றி தரக்​குறை​வான கருத்​துக்​களை தெரி​விப்​பர். இதனால் மனம் புண்​படும் பயிற்​சி​யாளர்​களை மனிதவள மேலா​ளர் நிதா கான் சமா​தானம் செய்து அவர்​களின் நம்​பிக்​கையை பெறு​வார். இப்​படி படிப்​படி​யாக பயிற்​சிக்கு சேர்​பவர்​களின் வாழ்க்கை முறை, உடை அணி​யும் பழக்​கம் ஆகிய​வற்றை அந்தக் குழு​வினர் மாற்​றி​யுள்​ளனர். மூளைச் சலவை செய்​யப்​பட்​ட​வர்​கள் தங்​கள் வீடு​களில் உள்ள இந்து கடவுள்​களின் படத்தை குடும்​பத்​தினருடன் தகராறு செய்து அகற்​றி​யுள்​ளனர்.

மத போதகருக்கு தொடர்பு: பயிற்சி ஊழியர்​களை மத மாற்​றம் செய்​யும் முயற்​சி​யில் மலேசி​யா​வில் இருந்து ஒரு மதபோதகரும் ஈடு​பட்​டுள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இவர் வாட்ஸ்- ஆப் மூலம் மதமாற்ற முயற்​சி​யில் ஈடு​பட்​டுள்​ளார். இதற்கு 12 ஊழியர்​கள் உடந்​தை​யாக இருந்​துள்​ளனர். திரு​மணம் செய்வதாகக் கூறி பல பெண் ஊழியர்​களை பாலியல் வன்கொடுமை செய்​துள்​ளனர். அலு​வல​கத்​தில் பாலியல் தொந்தரவு மற்​றும் மத மாற்​றம் நடை​பெற்​ற​தாக பயிற்​சிக்கு வந்த 8 பெண்​கள் மற்​றும் ஒரு ஆண் போலீ​ஸில் புகார் தெரிவித்துள்​ளனர்.

நாசிக் ஐடி அலுவலகத்தில் மதமாற்ற முயற்சி: மனிதவள பிரிவு மேலாளர் உட்பட 7 பேர் கைது
தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in