தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

Published on

கர்நாடகாவில் குடகு மாவட்டத்திலும், கேரளாவில் வயநாட்டிலும் கனமழை பெய்ததால் காவிரி மற்றும் கபிலா ஆற்றில் வெள்ள‌ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 124.80 அடி உயரம் உள்ள‌ கிருஷ்ணராஜசாகர் அணை யின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியுள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரத்து 916 கனஅடியாக குறைந்ததால் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 76 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2282.75 அடியாக உள்ள‌து. அணைக்கு விநாடிக்கு 11 ஆயிரம் க‌னஅடி நீர் வந்துக்கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை நெருங்கியுள்ளதால், அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 14 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே அளவுக்கு நீர்வரத்து தொடர்ந்தால் கபினி அணை ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும்.

கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ கத்துக்கு 17 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தற்போது அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப் படும் நீரின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக் கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in