

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 38,164 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,21,665 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:
இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,11,44,229
கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 38,164
இதுவரை குணமடைந்தோர்: 3,03,08,456
கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 38,660
கரோனா உயிரிழப்புகள்: 4,14,108
கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 499
சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 4,21,665
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 40,64,81,493
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.