முலாயம் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

முலாயம் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Updated on
1 min read

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியை முலாயம் சிங் நிறுவினார். மாநிலத்தில் 3 முறை முதல்வராக பதவி வகித்தார். கடந்த 1996 ஜூன் 1-ம் தேதி முதல்1998 மார்ச் 19-ம் தேதி வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். தற்போது அவருக்கு 81 வயதாகிறது. முதுமை காரணமாக சில ஆண்டு களாகவே அவர் உடல்நலக் குறைவால் அவதிபடுகிறார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவரது உடல் நிலை மோசமானதால், குர்கானில் உள்ள மெதந்தா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முலாயம் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in