

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 7 மாதங்கள் முடிந்து நேற்று 8-வது மாதத்தில் அடியெடுத்து வைத்தது.
இந்நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “போராட்டத்தை முடி வுக்கு கொண்டுவர வேண்டும் என அனைத்து விவசாய சங்கங் களிடமும் கேட்டுக் கொள்கிறேன். வேளாண் சட்டங்களின் எந்த வொரு விதி தொடர்பாகவும் விவாதிக்கவும் அதற்கு தீர்வு காணவும் அரசு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இதனிடையே போராட்டம் அமைதி வழியில் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி நாடு முழுவதிலும் இருந்து குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பவுள்ளதாக சம்யுக்த கிஸான் மோர்ச்சா அறிவித்துள் ளது. இதனால் டெல்லி போராட்ட களங்களில் விவசாயிகள் மேலும் கூடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக பாதுகாப்பு பணியில் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.