தடுப்பூசி பற்றிய தயக்கத்தை போக்க காங்கிரஸாருக்கு சோனியா வேண்டுகோள்

தடுப்பூசி பற்றிய தயக்கத்தை போக்க காங்கிரஸாருக்கு சோனியா வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி; காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்களுடன் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய காங்கிரஸார் பணியாற்ற வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்களிடம் உள்ள தயக்கத்தை போக்கும் நடவடிக்கையில் காங்கிரஸார் ஈடுபட வேண்டும். தேசிய அளவில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் மும்மடங்கு அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் இந்த ஆண்டு இறுதிக்குள் 75 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். தடுப்பூசிகள் வீணாவது குறைக்கப்பட வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் கரோனா தொற்று 3-வது அலை தாக்கும் என்றும் அது குழந்தைகளை தாக்கும் அபாயம் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன. கரோனா தொற்று காலத்தில் நாம் மக்களுக்கு தேவையான உதவிகளை அளித்து நம் பணிகளை தொடர வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in