75 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா தொற்று 60,471 ஆக சரிவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இந்தியாவில் தினசரி கரோனா தொற்று கடந்த 75 நாட்களுக்கு பிறகு 60,471 குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 9,13,378 ஆக குறைந்தது.

கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,471ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,95,70,881

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 60,471

இதுவரை குணமடைந்தோர்: 2,82,80,472

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 1,17,525

கரோனா உயிரிழப்புகள்: 3,77,031

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 2726

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 9,13,378

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 25,90,44,072

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள தகவல்படி இந்தியாவில் இதுவரை 38,13,75,984பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,51,358 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in