குறுவை நெல் குவிண்டால் விலை ரூ.1,940 ஆக நிர்ணயம்: குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

குறுவை நெல் குவிண்டால் விலை ரூ.1,940 ஆக நிர்ணயம்: குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு
Updated on
1 min read

வேளாண் விளை பொருட்களுக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ட ஆதரவு விலை (எம்எஸ்பி) தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021-22-ல் குறுவை பட்டத்தில்அறுவடையாகும் விளைபொருட் களுக்கான குறைந்தபட்ச ஆதரவுவிலையை மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இதன்படி குவிண்டால் நெல்லின் விலை ரூ.1,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு நிர்ணயித்த விலை ரூ.1,868 ஆகும்.

இதேபோல பாஜ்ரா, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எள்ளுக் கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு கூடுதலாக ரூ.452-ம் துவரம் பருப்புமற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட் டவற்றுக்கு குவிண்டாலுக்கு கூடுதலாக தலா ரூ.300-ம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

மத்திய அரசின் கொள்முதல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப் படவில்லை.

இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறைகைவிடப்படும் என்ற அச்சமும் இதற்குக் காரணமாகும். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணய முறை தொடரும் என்று அரசு கூறி வருகிறது. - பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in