சத்தீஸ்கரில் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

சத்தீஸ்கரில் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை
Updated on
1 min read

சத்தீஸ்கரில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பழங்குடியினர் நலத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கவ்ரேலா-பேந்த்ரா-மர்வாஹி மாவட்ட பழங்குடியினர் நலத் துறை உதவி ஆணையர் கே.எஸ்.மாஸ்ரம் கடந்த 21-ம் தேதி ஒரு உத்தரவைபிறப்பித்தார். சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த உத்தரவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த உத்தரவில், “மாவட்டபழங்குடியினர் நலத் துறையின்கீழ் இயங்கும் அலுவலகங்கள், ஆசிரமங்கள் (உறைவிட பள்ளிகள்), விடுதிகளில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு அடுத்த மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

ஊழியர்கள் தயக்கம்

கே.எஸ்.மாஸ்ரம் நேற்று முன்தினம் கூறும்போது, “கரோனாவைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள சிலர் தயங்குகின்றனர். எனவே, இத்துறையில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்வதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை 95 சதவீத ஊழியர்கள்தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள னர்” என்று தெரிவித்தார். - பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in