

மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கூடுதலாக ரெம்டெசிவர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இம்மாதம் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலான காலத்திற்கு, அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 22.17 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மே 23-ம் தேதி வரையில், 76.70 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது. இது வரையில் 98.87 லட்சம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்து நாடெங்கிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் மாநிலங்கள் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டியலையும், மருந்து நிறுவனங்களின் பட்டியலையும் மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா இணைத்துள்ளார்.