இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு சற்றே குறைந்தது: ஒருநாள் பாதிப்பு 3,23,144; உயிரிழப்பு 2771

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு சற்றே குறைந்தது: ஒருநாள் பாதிப்பு 3,23,144; உயிரிழப்பு 2771
Updated on
1 min read

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு சற்றே குறைந்து ஆறுதல் அளித்திருக்கிறது.

கடந்த 4 நாட்களுக்கு மேலாக அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்தைத் தாண்டியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,23,144 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாதிப்பு 3.5 லட்சத்திலிருந்து 3.25 லட்சத்துக்குக் குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 2771 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று: 3,23,144

இதுவரை ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பு: 1,76,36,307

24 மணி நேரத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை: 2,51,827

இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,45,56,209

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை: 2771

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை: 1,97,894

சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை: 28,82,204

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மொத்த எண்ணிக்கை: 14,52,71,186

இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in