

டெல்லியின் துவாரகா பகுதி யில் எல்லை பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எப்) சொந்த மான சிறிய ரக விமானம் நேற்று வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த 10 பேரும் பலியா யினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதி காரிகள் நேற்று கூறியதாவது:
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தி லிருந்து இரட்டை இன்ஜின் கொண்ட சிறிய ரக சூப்பர்கிங் விமானம் ஒன்று ராஞ்சிக்கு புறப்பட்டது. விமானத்தில் பைலட், துணை பைலட் உட்பட 10 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே தொழில் நுட்பக் கோளாறு இருப்பதை உணர்ந்த பைலட், மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்ப முடிவு செய்துள்ளார். அடுத்த சில விநாடிகளில் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. பின்னர் விமான நிலைய சுற்றுச்சுவருக்கு அருகே விழுந்தது என்றனர்.
இதுகுறித்து விமான போக்கு வரத்துத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா கூறும்போது, “விபத்துக்குள் ளான விமானத்தில் பயணித்த பைலட்கள் உட்பட 10 பேரும் பலியாயினர். இந்த விபத்துக் கான காரணம் குறித்து விசா ரணை நடத்தப்படும்” என்றார்.
இதுகுறித்து பிஎஸ்எப் வட்டாரத்தினர் கூறும்போது, “விபத்துக்குள்ளான விமானத் தில் பைலட் பகவதி பிரசாத் பட், துணை பைலட் ராஜேஷ் ஷிவ்ரெய்ன், 6 தொழில்நுட்ப ஊழியர்கள், ஒரு பொறியாளர் மற்றும் ஒரு விமான ஊழியர் என 10 பேர் பயணம் செய் தனர்” என்றனர்.
விபத்து நடந்த இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
பிரதமர் இரங்கல்
விமான விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியில் பிஎஸ்எப் விமானம் விபத்துக்குள்ளா னதில் அதில் பயணித்தவர்கள் பலியானது மன வேதனை அளிக்கிறது. உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.