க‌ர்நாடக இடைத்தேர்தலில் 65 சதவீத வாக்குப்பதிவு

க‌ர்நாடக இடைத்தேர்தலில் 65 சதவீத வாக்குப்பதிவு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் பாகல்கோட்டை, தாவணகெரே தெற்கு ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பாகல்கோட்டையில் 65.92 சதவீதமும், தாவணகெரே தெற்கு தொகுதியில் 64.25 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. ஒட்டு மொத்தமாக இரு தொகுதிகளிலும் பெரிய அளவில் மோதல்கள் இல்லாமல், அமைதியான முறையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரிபுரா, நாகாலாந்து: நாகாலாந்து மாநிலம் கோரிடாங் சட்டப்பேரவைக்கு நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் 80.62 சதவீத வாக்குகளும், திரிபுரா மாநிலம் தர்மா நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 79.84 சதவீத வாக்குகளும் பதிவாயின.

க‌ர்நாடக இடைத்தேர்தலில் 65 சதவீத வாக்குப்பதிவு
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in