பாரத ரத்னா விருது பெற தகுதியில்லாதவர் சச்சின்: முன்னாள் எம்.பி. சிவானந்த திவாரி விமர்சனம்- பாஜக பதிலடி 

சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
சச்சின் டெண்டுல்கர் : கோப்புப்படம்
Updated on
2 min read

பாரத ரத்னா விருது பெற தகுதியில்லாதவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த திவாரி விமர்சித்துள்ளார்.

வாழ்க்கை மிகவும் வினோதமானது. வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இன்று இருப்பவர் நாளை கீழே வரலாம். கொண்டாடப்படுபவர்கள், தூக்கி வீசப்படலாம் என்பதுதான் நிதர்சனம்.

அதற்கான சம்பவம்தான் சமீபத்தில் நடந்துள்ளது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சினை வர்ணித்த ரசிகர்கள் கூட்டம் அவர் விவசாயிகள் போராட்டம் குறித்து பதிவிட்ட ஒரு ட்விட்டால் அவர் மீதான ஒட்டுமொத்த மரியாதைையயும் காலில்போட்டு மிதித்துவிட்டார்கள். ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் சச்சினை கடுமையாகவிமர்சித்து வருகின்றனர்.

பெரும்பாலான முக்கிய விஷங்களில் அமைதி காக்கும் சச்சின், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களைக் கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

சச்சினின் கருத்து ட்விட்டரில் பெரும் புயலைக் கிளப்பியது. பல்வேறு தரப்பிலும் சச்சினை டேக் செய்து ரசிகர்கள் வசைமாரி பொழிந்தனர். ஏறக்குறைய ஒரு லட்சம் முறைக்கு மேலாக சச்சின் ட்வி்ட் ரீவீட் செய்யப்பட்டது.

சச்சின் தனது ட்வீட்டில் “இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாகத்தான் இருக்க வேண்டுமே தவிர உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது.

இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள் முடிவெடுப்பார்கள். ஒரு தேசமாக ஒன்றுபடுவோம்” எனத் தெரிவித்தார்

இந்நிலையில் சச்சினுக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான சிவானந்த திவாரி கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஓர் ஆங்கிலநாளேட்டுக்கு சிவானந்த திவாரி அளித்த பேட்டியில் “ விவசாயிகள் கிராமங்களில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு ட்விட்டர் பற்றி ஏதும் தெரியாது, அதில் என்ன எழுதுகிறார்கள் என்றும் தெரியாது. இரு வெளிநாட்டவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள், உடனே சச்சின் டெண்டுல்கர் அவர்களுடன் வாதத்துக்குச் சென்றுவிட்டார்.

பல்வேறு பொருட்களின் நல்லெண்ணத் தூதராக சச்சின் இருந்து வருகிறார். அவர் பாரத ரத்னா விருது பெற தகுதியில்லாதவர். தகுதியுள்ள பலர் இருக்கிறார்கள், தயான்சந்துக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்கலாம்”எனத் தெரிவி்த்தார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் நிகில் ஆனந்த், திவாரியின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “ சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்கக்கூடாது என்றால் எனக்கு வியப்பா இருக்கிறது. அப்படியென்றால் யாருக்கு இந்த விருதை கொடுப்பீர்கள். என்ன பேசுவதென்று தெரியாமல் திவாரி பேசுகிறார். நல்ல மருத்துவரை திவாரி சந்தித்து சிகிச்சை எடுக்கலாம்”எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in