பக்கவாதம் ஏற்பட்ட நிலையிலும் கேரள முதியவரின் அர்ப்பணிப்புமிக்க தூய்மைப்பணி மங்கவில்லை: மன் கி பாத்தில் பிரதமர் மோடி பாராட்டு

இன்று காலை ஒலிபரப்பான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடி | படம்: ஏஎன்ஐ.
இன்று காலை ஒலிபரப்பான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடி | படம்: ஏஎன்ஐ.
Updated on
1 min read

தனக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ள நிலையிலும் கூட தூய்மைப் பணி மங்கவில்லை என கேரள முதியவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 73-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

"கேரளாவிலிருந்து மேலும் ஒரு செய்தியை நான் பார்க்கிறேன், இச்செய்தி நமது பொறுப்புகளை நினைவூட்டுகிறது.

என்.எஸ்.ராஜப்பன் என்பவர் கேரளாவின் கோட்டயத்தில் மாற்றுத் திறனாளி முதியவர். பக்கவாதம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. ஆனால் தூய்மை குறித்த அவரது அர்ப்பணிப்பு மங்கவில்லை.

"கடந்த பல ஆண்டுகளாக, அந்த முதியவர் வேம்பநாத் ஏரியில் தனது படகின்மூலம் சென்று அனைத்து பிளாஸ்டிக் பாட்டில்களையும் அகற்றி தூய்மையாக வைத்துள்ளார்.

நீர்நிலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்பதை அவர் எவ்வளவு உயர்வாக நினைக்கிறார் என்று கற்பனை செய்து பாருங்கள்! நாம் அனைவரும் ராஜப்பனிடமிருந்து உத்வேகம் பெற்று, முடிந்தவரை தூய்மைக்கு பங்களிக்க வேண்டும்.''

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in