பறவைக் காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பறவைக் காய்ச்சல்; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Published on

பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2021 ஜனவரி 21-இன் படி, சத்திஸ்கர், ஹரியாணா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள பண்ணை பறவைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

பத்து மாநிலங்களில் (சத்திஸ்கர், டெல்லி, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்) காகம், இடம்பெயர்ந்த,காட்டு பறவைகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மகாராஷ்டிராவின் தானே, யவத்மால், வர்தா, அகமது நகர் மற்றும் ஹிங்கோலி மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்திலும், சத்திஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்திலும் பண்ணை பறவைகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

சத்திஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பறவை காய்ச்சல் 2021-ன் தயார்நிலை, கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்புக்கான திருத்தப்பட்ட செயல்திட்டத்தின் படி தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் தினமும் தகவல்களை வழங்கி வருகின்றன. சமூக ஊடகம் (டிவிட்டர், முகநூல்) உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை எடுத்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in