கரோனா மரணம்: 229 நாட்களுக்குப் பிறகு 170-க்கும் குறைவு

கரோனா மரணம்: 229 நாட்களுக்குப் பிறகு 170-க்கும் குறைவு
Updated on
1 min read

229 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளில் 170-க்கும் குறைவான கரோனா மரணங்கள் மடடுமே பதிவாகியுள்ளது.

கடந்த பல நாட்களாக இந்தியாவில் கரோனா தொற்றின் புதிய பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,311 பேர் மட்டும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளொன்றில் ஏற்படும் உயிரிழப்புகளும் நாட்டில் பெருமளவு குறைந்துள்ளது. 229 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளில் 170-க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா நோய் தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2.25 லட்சமாக (2,22,526) உள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 2.13 சதவீதமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 1,00,92,909 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து 99 இலட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (98,70,383).
குணமடைந்தவர்களின் வீதம் 96.43 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது உலகளவில் மிகவும் அதிகமாகும்.

புதிதாக குணமடைந்தவர்களில் 78.56 சதவீதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 4,659 பேரும், மகாராஷ்டிராவில் 2,302 பேரும், சத்தீஸ்கரில் 962 பேரும் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

80.25 சதவீத புதிய தொற்றுக்கள் 9 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. கேரளாவில் 4,545 பேரும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3,558 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 161 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in