ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தென்கொரியாவில் சுற்றுப்பயணம்

ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தென்கொரியாவில் சுற்றுப்பயணம்

Published on

இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவானே 3 நாட்கள் பயணமாக நேற்று தென்கொரியா சென்றடைந்தார்.

இரு நாடுகளின் ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சு நடத்த ராணுவ தலைமை தளபதிஎம்.எம்.நரவானே 3 நாள் பயணமாக நேற்று தென்கொரியா சென்றடைந்தார். தென்கொரியா வில் அந்நாட்டு ராணுவ அமைச்சர், முப்படைகளின் தலைவர், ராணுவ தளவாட கொள்முதல் நிர்வாகத்துறை அமைச்சர் ஆகியோரை எம்.எம்.நரவானே சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இந்தியா - தென்கொரியா இடையேராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அவர் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

மேலும், தலைநகர் சியோலில் உள்ள தேசிய கல்லறை மற்றும் போர் நினைவுச் சின்னங்களில் மலர் வளையம் வைத்து நரவானே மரியாதை செலுத்துகிறார். டேஜியான் என்ற இடத்தில் உள்ள ராணுவ மேம்பாட்டு நிறு வனத்துக்கும் அவர் சென்று பார்வையிட உள்ளார்.

இந்த கரோனா காலத்தில் 5-வது நாடாக தென்கொரியாவுக்கு எம்.எம்.நரவானே சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கெனவே மியான்மர், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் ராணுவ தளபதிகளுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து நரவானே பேச்சு நடத்தியுள்ளார் என்றுராணுவ தரப்பில் வெளியிட்டஅறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in