கரோனா பாதித்த உத்தராகண்ட் முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

கரோனா பாதித்த உத்தராகண்ட் முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கடந்த 18-ம் தேதி கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென காய்ச்சல் அதிகரித்தது. இதையடுத்து நேற்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இத்தகவலை உத்தராகண்ட் முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in