சோனியா காந்தி பிறந்தநாள்: ட்விட்டரில் மத்திய அமைச்சர் கட்கரி வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி | கோப்புப் படம்.
Updated on
1 min read

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 74-வது பிறந்தநாளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்திய துயரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்திருந்தார்.

இதனால் சோனியா காந்தியின் பிறந்தநாளில் கேக் வெட்டுவது உட்பட அனைத்து வகையான கொண்டாட்டங்களையும் தவிர்க்குமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், அனைத்து மாநிலத் தலைவர்களிடமும் கேட்டுக் கொண்டார்.

சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டிருந்தாலும் தலைவர்கள் அவருக்கு ட்விட்டர் வழியாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:

"இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி-ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழவும் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்."

இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in