

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் வீதம் இன்று 93.52 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதமாக, தினசரி கரோனா பாதிப்பை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், தொடர்ந்து 11-வது நாளாக, தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கு கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 44,739 பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் புதிதாக 38,617 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 6,122 குறைந்து தற்போது 4,46,805 ஆக உள்ளது. கோவிட் மொத்த பாதிப்பில் இது 5.01 சதவீதம்.
குணமடைவோர் வீதம் இன்று 93.52 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 83,35,109 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 474 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 78.9 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.